மருந்துகள் இல்லாமல் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க 15 டிப்ஸ்!

மன அழுத்தம், தூக்கத்தை இழப்பது, காலை உணவை தவிர்ப்பது, போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது, அதிக கார்ப்பன் உள்ள உணவை உட்கொள்வது மற்றும் மது அருந்துவது ஆகியவை உங்கள் இரத்த சர்க்கரையை அதிகரிக்க கூடும்.

diabetes
diabetes

உங்கள் உடலில் இரத்தத்தில் இருந்து சர்க்கரையை உயிரணுக்களுக்கு திறம்பட கொண்டு செல்ல முடியாத போது உயர் இரத்த சர்க்கரையாக மாறுகிறது. மேலும் இது சரிபார்க்கப்படாமல் இருந்தால் நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும்.

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின்படி, அதிக அளவு மன அழுத்தம், தூக்கத்தை இழப்பது, காலை உணவை தவிர்ப்பது, போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது அல்லது அதிக கார்ப்பன் உள்ள உணவை உட்கொள்வது மற்றும் மது அருந்துவது ஆகியவை உங்கள் இரத்த சர்க்கரையை அதிகரிக்க கூடும். எனவே நீரிழிவு நோயாளிகளுக்கு பெரும்பாலும் உயர் இரத்த சர்க்கரை அளவு உள்ளது. மருந்துகள் உங்கள் இரத்த சர்க்கரை அளவை சமப்படுத்த உதவும். ஆனால், மருந்துகள் இல்லாமல் உங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் சில வழிகளை இங்கு காண்போம்.

தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்: தினமும் உடற்பயிற்சி செய்வது நல்லது. நடைபயிற்சி, பைக் டிரைவிங், ரன்னிங் மற்றும் நீச்சல் போன்ற சில அடிப்படை பயிற்சிகள் உங்கள் இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது. மேலும் உங்கள் எடையை குறைக்கவும், இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கவும் பெரும் உதவியாக இருக்கும்.

தண்ணீர் அருந்துங்கள்: உங்கள் இரத்த சர்க்கரையை ஆரோக்கியமான அளவில் வைத்திருக்க உங்களை எப்போதும் நீரேற்றமாக வைத்து இருப்பது ஒரு முக்கியமான ஒன்றாகும். அடிக்கடி தண்ணீர் குடித்தால் சீறுநீரகத்திற்கு நல்லது. மேலும் இதனால் உங்கள் உடலில் இருந்து தேவையற்ற இரத்த சர்க்கரையை வெளியேற்றவும் இந்த நீர் சிறுநீரகத்திற்கு உதவும்.

எடை பராமரித்தல்: ஆரோக்கியமான எடையை பராமரிப்பது இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கிறது மற்றும் நீரிழிவு நோயைக் குறைக்கும். உங்கள் உடல் எடை கட்டுக்கோப்பாக இருப்பதை அடிக்கடி உறுதி செய்து கொள்ளுங்கள்.

கார்போஹைட்ரேட் உணவுகளை தவிருங்கள்: உங்கள் அன்றாட உணவில் கார்போஹைட்ரேட் உணவுகளை கட்டுப்படுத்துவது அவசியம். இது ஆற்றலை சர்க்கரையாக மாற்றுகிறது. இது இன்சுலின் மூலம் செல்களுக்குள் செல்கிறது. நீங்கள் அதிக எண்ணிக்கையிலான கார்போஹைட்ரேட் உணவுகளை உட்கொள்ளும்போது, அது உங்கள் உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவை உயர்த்தி விடும். எனவே பிரட், பாஸ்தா, பீர், பாப் கார்ன், உருளை கிழங்கு போன்றவை தவிர்த்து விடுங்கள்.

நார்ச்சத்து (ஃபைபர்) உட்கொள்ளலை அதிகரிக்கவும்: நார்ச்சத்து நிறைந்த உணவை சாப்பிடுவது இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நார்ச்சத்து செரிமானம் மற்றும் சர்க்கரை உறிஞ்சுதலை மெதுவாக்குகின்றன. மேலும் இது இறுதியில் இரத்த சர்க்கரை அளவை குறைக்க வழிவகுக்கிறது.

குரோமியம், மெக்னீசியம் நிறைந்த உணவை உண்ணுங்கள்: குரோமியம், மெக்னீசியம் நிறைந்த உணவுகள் உங்கள் உடலில் தேவையான அளவு நுண்ணிய ஊட்டச்சத்துக்களை வைத்து கொள்ளவும். அதே நேரத்தில் இரத்த சர்க்கரை அளவை குறைக்கவும் இந்த உணவுகளை உங்கள் அன்றாட உணவில் பட்டியலில் சேர்த்து கொள்வது நல்லது.

மன அழுத்தத்தை கட்டுப்படுத்தவும்: மன அழுத்த ஹார்மோன்கள் உங்கள் உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவை பாதிக்கும். நீங்கள் மன அழுத்தத்தில் இருக்கும்போது குளுகோகன் மற்றும் கார்டிசோல் போன்ற ஹார்மோன்கள் சுரக்கப்படுகின்றது. இது கடைசியில் உடலில் இரத்த சர்க்கரையை உயர்த்தும். எனவே எப்போதும் மனதை ஒருநிலைப்படுத்தி வைத்திருங்கள்.

இரத்த சர்க்கரையை தவறாமல் கண்காணித்தல்: இரத்த சர்க்கரையை தவறாமல் கண்காணிப்பது உங்கள் உடலில் சர்க்கரை அளவை பராமரிக்கவும், கட்டுப்படுத்தவும் உதவும். தவறாமல் அதை அளவிடுவது தேவைப்பட்டால், உங்கள் உணவை சரிசெய்யவும் உதவும்.

உணவில் சில மசாலாப் பொருள்களை சேர்க்கவும்: இலவங்கப்பட்டை மற்றும் வெந்தயம் போன்ற மசாலாப் பொருட்கள் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும் பராமரிக்கவும் உதவும். இலவங்கப்பட்டை உடலில் இரத்த சர்க்கரை அளவை குறைக்கும் போது இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கிறது. வெந்தயம், மிகவும் கரையக்கூடிய நார்ச்சத்து, எனவே இது கார்ப் செரிமானத்தை அதிகரித்து ரத்தத்தில் உள்ள சர்க்கரை உறிஞ்சுதலையும் குறைக்கிறது.

உணவில் வினிகரை சேர்க்கவும்: வினிகரை உட்கொள்வது இரத்த சர்க்கரையை குறைக்க உதவுகிறது. இரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும் போது இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கும். இது கொலஸ்ட்ரால் குறைப்பு மற்றும் எடை இழப்புக்கும் உதவுகிறது.

கட்டுப்பாட்டு உணவு: உணவு கட்டுப்பாடு கலோரி உட்கொள்ளலை சீராக்க உதவும் மற்றும் உங்கள் எடையை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. மேலும், ஆரோக்கியமான இரத்த சர்க்கரை அளவை மேம்படுத்தும்.

மூலிகை டீ அருந்துங்கள்: ஒரு நாளில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட கப் கிரீன் டீ அல்லது பிளாக் டீ உட்கொள்வது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தி, உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பராமரிக்க உதவும்.

குறைந்த கிளைசெமிக் உணவை உட்கொள்ளுங்கள்: உலர்ந்த பீன்ஸ், ஓட் மீல், பழங்கள் மற்றும் மாவுச்சத்து இல்லாத காய்கறிகள் போன்ற குறைந்த கிளைசெமிக் குறியீட்டுடன் (ஜி.ஐ) உணவை உண்ணுங்கள். குறைந்த ஜி.ஐ. கொண்ட உணவை உட்கொள்வது உடலில் நீண்ட கால இரத்த சர்க்கரையை குறைக்கும். இதனால் உங்கள் ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் வைக்கப்படும்.

வாழ்க்கை முறை மாற்றங்கள்: உங்கள் உடலின் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த வாழ்க்கை முறை மாற்றங்கள் மிக முக்கியமான ஒன்றாகும். அன்றாட உடற்பயிற்சியை மேற்கொள்வது மற்றும் சீரான உணவு கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பது அவசியமான ஒன்றாகும். மேலும் துரித உணவுகளை தவிர்த்து ஆரோக்கியமான உனவுகளை சாப்பிடுங்கள்.

Recommended For You

About the Author: Mohaanv